கான்பரா:அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு திமோர் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு விமான பயிற்சி மேற்கொள்ளும் போது அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸ் விமானம் ஒன்று வடக்கு ஆஸ்திரேலிய தீவில் இன்று (ஆகஸ்ட் 27) விபத்துக்குள்ளானது. இதில், மூன்று கடற்படையினர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சொந்தமான பெல் போயிங் வி-22 ஓஸ்ப்ரே டில்ட்ரோட்டர் விமானம் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு விபத்து குள்ளாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கி 23 பேர் காயமடைந்தனர். இதில், 5 பேர் படுகாயம் ஏற்பட்டு 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டார்வின் நகரத்திலுள்ள மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பெல் போயிங் வி-22 ஓஸ்ப்ரே டில்ட்ரோட்டர் விமானம் விபத்து குள்ளான பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருவதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆஸ்திரேலிய தீவான மெல்வில் இந்த விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 23 பேர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு உடனடியாக 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டார்வின் நகர மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேச காவல்துறை ஆணையர் மர்வி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Toxic Gas Inhalation: விஷவாயு தாக்கி 3 விவசாயிகள் பலி.. கிணற்றில் இறங்கிய போது நேர்ந்த கொடூரம்!
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேச முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் மர்பி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, விமான பயிற்சியின் போது காயமடைந்தவர்கள் சம்மந்தப்பட்ட தீவில் இருந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் இறக்கை விமானம் மூலம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், காயமடைந்த ஒருவர் ராயல் டார்வின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுவருவதாகவும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காயமடைந்தவர்களில் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை மேலும் இது ஒரு துயரமான சம்பவம் தேவையான உதவிகளை வழங்க வடக்கு பிரதேசம் அரசாங்கம் துணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறும்போது, அமெரிக்காவின் பெல் போயிங் வி-22 ஓஸ்ப்ரே டில்ட்ரோட்டர் விமானம் பயிற்சியின் போது விபத்து நடந்துள்ளது. இந்த கூட்டு விமான பயிற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு திமோர் ஆகிய விமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்படும் போது அமெரிக்க விமான வீரர்கள் மட்டும் பயிற்சியில் ஈட்டுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சுமார் 150 அமெரிக்க கடற்படையை சேர்ந்த போர் கப்பல்கள் டார்வினில் உள்ளது மேலும் வருடத்திற்கு 2500 முறை நகரத்தை சுற்றி வருகிறது. அமெரிக்க பல்வேறு நாடுகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஜீலை மாதம் எம்.ஆர்.ஹச் தைபான் ஹெலிகாப்டர் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் உயரிழந்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:West Bengal: சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து - 6 பேர் பரிதாப பலி!