இம்பால்: மணிப்பூர் மாநிலம், நானி மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவிகள் பயணித்த பேருந்து லாங்சாய் மலைப்பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.