இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 13 ரோஹிங்கியா அகதிகளை காவல்துறையினர் டெல்லியில் கைது செய்தனர். அதன் பிறகு, அவர்கள் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பட்பர்கஞ்ச், உத்தம் நகர் காவல்நிலையங்களில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ரோஹிங்கியா அகதிகள் கைது!
டெல்லி: தலைநகரில் 13 ரோஹிங்கியா அகதிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்து, அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ரோஹிங்கியா அகதிகள்
இதுகுறித்து டெல்லி மூத்த காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், "வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகம் அளித்த தகவலின் அடிப்படையில் அகதிகளை பிடித்தோம், விசாரணை நடைபெற்றுவருகிறது. அதுமுடிவும் வரை அவர்கள் முகாமில் இருப்பார்கள்" என்றார்.