ருத்ராபூர்: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் இன்று (ஆகஸ்ட் 30) விஷ வாயு கசிந்ததில் 25 பேர் மயக்கமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ருத்ராபூர் போலீசார் மாநில பேரிடர் மீட்புக் குழுவுடன்(SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உத்தரகாண்ட்டில் விஷவாயு கசிந்ததில் 25 பேர் மயக்கம் - 25 பேர் மயக்கம்
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் குப்பைக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து வெளியான விஷவாயுவால் திடீரென 25 பேர் மயக்கமடைந்தனர்.
Etv Bharatஉத்தரகாண்ட்டில் விஷவாயு கசிந்ததில் 25 பேர் மயக்கம்
இதனிடையே மீட்பு பணியின்போது மீட்பு குழு அதிகாரிகள் இருவருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கசிந்த பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:முன்னணி பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்