படாபரா:சத்தீஸ்கர் மாநிலம் படபாராவில் இன்று (பிப்.24) அதிவேகமாக சென்ற பிக்அப் வாகனம் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். 3 படுகாயமடைந்தனர். இந்த விபத்து நள்ளிரவில் கமாரியா அருகே பலோடா பஜார் சாலையில் நடந்துள்ளது. இதுகுறித்து சக வாகனவோட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் அடைப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், அர்ஜூனி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 14 பேர் கிலோரா கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொள்ள பிக்அப் வாகனத்தில் சென்றுள்ளனர்.