தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாமில் படகு விபத்து - 100க்கும் மேற்பட்டோர் மாயம் - இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து

அசாமின் பிரம்மபுத்திர நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

Brahmaputra in Assam
Brahmaputra in Assam

By

Published : Sep 8, 2021, 9:41 PM IST

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்தரா நதியில் இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 120க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

மீட்பு நடவடிக்கையில் பேரிடர் மேலாண்மை குழு உடனடியாக களமிறங்கிய நிலையில், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்த படகுகள் மஜுலியிலிருந்து நிமாதிகாட்டிற்கும், நிமாதிகாட்டிலிருந்து மஜுலிக்கும் சென்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அசாம் அரசுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ள நிலையில், மூன்று அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அம்பானியிடம் பணம்பறிக்க திட்டமிட்ட காவலர் சச்சின் வாசே!

ABOUT THE AUTHOR

...view details