தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டாசு குடோனில் தீ விபத்து..  4 பேர் உயிரிழப்பு.. - roorkee crackers godown fire

உத்தரகாண்ட் மாநிலத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

பட்டாசு குடோனில் தீ விபத்து
பட்டாசு குடோனில் தீ விபத்து

By

Published : Feb 20, 2023, 7:21 PM IST

ரூர்க்கி: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரூர்க்கியில் இன்று (பிப். 20) பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், கனுங்கோயன் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்துக்கு விரைந்து தீயை அணைத்தோம். இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்த குடோனின் அருகில் இருந்த கடைகளிலும் தீ பரவியதால் 3 கடைகள் எரிந்து நாசமாகின. அதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்களுக்கும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில் உயிரிழந்த 4 பேரில் 3 பேர் ரூர்க்கியை சேர்ந்த அத்னன், இம்லிரோத், அர்மான் என்பது தெரியவந்துள்ளது. ஒருவரது அடையாளம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல சிகிச்சை பெற்று வருவது சூரஜ் மற்றும் நீரஜ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பட்டாசு குடோன் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. அதனடிப்படையில் குடோன் உரிமையாளர் அலோக் ஜிண்டால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் சட்டவிரோதமாக சிறுவர்களை வைத்து பட்டாசு தயாரிக்கும் பணியை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அஸ்ஸாம் எல்லையில் பயங்கரவாத தாக்குதல்.. பொதுமக்களில் 3 பேர் சுட்டுக்கொலை..

ABOUT THE AUTHOR

...view details