கொல்கத்தா :மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஜூலை 8ஆம் தேதி இன்று ஒரேகட்டமாக 73 ஆயிரத்து 887 இடங்களுக்கான கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது முதலே பல்வேறு பகுதியில் வன்முறைகள் வெடித்து வருகின்றன. மாநிலத்தை அளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது முதலே மாநிலத்தில் கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்து வருவதாக கூறப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எஃப் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 10க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 3 பேரும், கிழக்கு பரதமான் மாவட்டத்தில் 2 பேர், மால்ட, நடியா, குஷ்பெஹார் வடக்கு தினஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் உள்பட மொத்தம் 15 பேர் வன்முறைச் சம்பவங்களுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மொத்த உள்ள 73 அயிரத்து 881 பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரம் பேர் போட்டியிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.