தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உபியில் லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு.. விபத்தை வேடிக்கை பார்த்ததால் வீபரீதம்.. - விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளான காரை வேடிக்கை பார்த்த கூட்டத்தின் மீது லாரி ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

லாரி விபத்து
லாரி விபத்து

By

Published : Jan 29, 2023, 12:08 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் பங்கி அருகே உள்ளராஜாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹ்ரை சாலையில் இன்று (ஜனவரி 29) காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டது.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பயிடத்திலேயே உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோபோல காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், முதலில் நடந்த விபத்தை காண 20-க்கும் மேற்பட்டோர் அஜாக்கிரதையாக சாலையில் கூடியுள்ளனர். இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரும் காயமடைந்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்படங்களுக்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மருத்துமனையில் தீ விபத்து - மருத்துவ தம்பதி உள்பட 5 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details