அமலாபுரம்(ஆந்திர பிரதேசம்): ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் கடந்த செவ்வாய்கிழமை (மே 24) கோணசீமா மாவட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்து கலவரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திர போக்குவரத்து அமைச்சரின் கார், அரசு பேருந்து, மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது. காவல்துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து டிஜிபி கேவி ராஜேந்திரநாத் ரெட்டி கூறுகையில், ‘புதன்கிழமை முதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.