தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: மூவர் மரணம், எழுவர் படுகாயம் - மும்பை கனமழை

மும்பையிலுள்ள கோவண்டி பகுதியில் கனமழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் படுகாயமடைந்ததாகவும் மும்பை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கட்டடம் இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
மும்பையில் கட்டடம் இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

By

Published : Jul 23, 2021, 3:02 PM IST

மகாராஷ்டிரா:மும்பை புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. மழை காரணமாக சில நாள்களுக்கு முன்னர் செம்பூர் பாரத் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல், விக்ரோலி பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கோவாண்டியில் கட்டடம் இடிந்து விபத்து

இந்நிலையில், இன்று (ஜூலை 23) அதிகாலை 4.58 மணிக்கு கோவண்டி சிவாஜி நகர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், காவல் துறையினர், மீட்புக் குழுவினர் ஆகியோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை, இந்த விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் சிகிச்சைக்காக ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ​​மேலும், மூன்று பேர் சியோனிலுள்ள லோக்மான்ய திலக் நினைவு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மூவர் உயிரிழப்பு

ராஜாவடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்ஷாத் ஷேக் (45) என்ற பெண், நேஹா பர்வேஸ் ஷேக் (35), மோகர் ஜாபீர் ஷேக் (80) ஆகிய மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், விபத்திலிருந்து மீட்கப்பட்ட மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மும்பையில் கனமழை: சுவர் இடிந்து 25 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details