தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு - கர்நாடகாவில் சாலை விபத்து

கர்நாடகாவில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் குடும்பத்தோடு பரிதாபமாக பலியான 9 பேர்...!
சாலை விபத்தில் குடும்பத்தோடு பரிதாபமாக பலியான 9 பேர்...!

By

Published : Oct 16, 2022, 11:11 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், காந்தி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு லாரிக்கும் பேருந்துக்கும் இடையே செல்ல முற்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து சக வாகனவோட்டிகள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த பாணாவரம் போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் 9 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், உயிரிழந்தவர்கள் லீலாவதி (50), சைத்ரா (33), சமர்த் (10), டிம்பி (12), தன்மய் (10), துருவா (2), வந்தனா (20), தொட்டய்யா (60) என்பதும் தெரியவந்தது. ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பாரதி (50) என்பவர் தனது குடும்பத்தினர் 14 பேருடன் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதாவை தரிசித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details