தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்டில் கனமழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு! - கனமழை

உத்தரகாண்டில் கனமழைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

Uttarakhand
Uttarakhand

By

Published : Jul 19, 2021, 9:28 AM IST

உத்தரகாசி : உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக பரவலாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 19) நள்ளிரவு- அதிகாலை நேரங்களில் பெய்த கனமழையில் சிக்கி மேண்டோ கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தை உள்பட சிலர் மாயமாகினர்.

அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். சில மணி நேர தேடலுக்கு பின்னர் 6 வயது குழந்தை உள்பட மூவர் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் இருவர் பெண்கள் ஆவார்கள்.

முன்னதாக கனமழையில் சிக்கி அதேபகுதியை சேர்ந்த நால்வர் காயமுற்றனர். அவர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க : மும்பையில் கொட்டித் தீர்த்த மழை - சாலையில் தேங்கிய தண்ணீர்

ABOUT THE AUTHOR

...view details