தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

kakinada tragedy: எண்ணெய் டேங்கர் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளர்கள் பலி! - Oil Tanker Cleaning 7 dead

ஆந்திர மாநில காக்கிநாடாவில் எண்ணெய் ஆலையில் உள்ள டேங்கரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 7 பேர் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

ஊழியர்கள் பலி
ஊழியர்கள் பலி

By

Published : Feb 9, 2023, 11:20 AM IST

காக்கிநாடா:ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் ராம்பேட்டா பகுதியில் அம்பதி சுப்பன்னா என்ற ஆயில் உற்பத்தி ஆலை உள்ளது. சீரமைப்பு பணிகளை முன்னிட்டு ஆலையில் உள்ள எண்ணெய் டேங்கரை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு திடீர் முச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

எண்ணெய் தொட்டிக்குள் மயங்கி விழுந்த ஊழியர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் 7 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு விரைந்தனர். ஆலையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் ஆலையை சுற்றியுள்ள படேரு மற்றும் புலிமெரு கிராமங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர். எண்ணெய் தொட்டி தூய்மை பணியில் ஈடுபட்ட 7 ஊழியர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதையும் படிங்க:ட்வீட் செய்வதில் உச்சவரம்பா?.. ஷாக்கான பயனர்கள்!

ABOUT THE AUTHOR

...view details