தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கறிக்கடைக்காரர்கள் முகத்தில் சிறுநீர் கழித்த போலீஸ்காரர்கள் - கறிக்கடைகாரர் மீது சிறுநீர் கழித்த போலீஸ்

மூன்று காவலர்கள் உட்பட ஏழு பேர் கறிக்கடை வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கறிக்கடைக்காரர்கள் முகத்தில் சிறுநீர் கழித்த போலீஸ்காரர்கள்
கறிக்கடைக்காரர்கள் முகத்தில் சிறுநீர் கழித்த போலீஸ்காரர்கள்

By

Published : Mar 17, 2023, 4:17 PM IST

டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் மூன்று காவலர்கள் உட்பட ஏழு பேர் கூட்டாக சேர்ந்து 2 கறிக்கடை வியாபாரிகளை தாக்கியது மட்டுமல்லாமல், அவர்கள் முகத்தில் சிறுநீர் கழித்தும், பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருப்பதும் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் கிளப்பி உள்ளது. இது குறித்து டெல்லியின் ஷஹ்தரா போலீசார் கூறுகையில், காஜிபூர் பகுதியை சேர்ந்த கறிக்கடை வியாபாரி நவாப் என்பவர் தனது உறவினர் சோயப் என்பவருடன் முஸ்தபாபாத்தில் வசிக்கும் ஒருவருக்கு கறி சப்ளை செய்ய மார்ச் 7ஆம் தேதி காரில் சென்றுள்ளார்.

அப்போது, ​​ஆனந்த் விஹார் அருகே எதிர்பாராத விதமாக ஒரு ஸ்கூட்டர் மீது மோதி உள்ளார். இதனால் அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் ரூ.4,000 நஷ்டஈடு கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், போலீஸ்காரர் ஒருவர் அங்கு வந்து 2,500 ரூபாயை நவாப்பிடம் இருந்து வாங்கி ஸ்கூட்டரை ஓட்டி வந்தவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த போலீஸ்காரர் நவாப்பிடம் ரூ.15,000 பணம் கேட்டும், கொடுக்கவில்லை என்றால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க:ஆம்புலன்ஸ் வழங்காததால் அவலம் - தங்கையின் சடலத்தை 10 கி.மீ துமந்து சென்ற அண்ணன், என்ன நடந்தது?

இவர்கள் தர மறுக்கவே, பிசிஆர் வேனில் அவர்களை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனிடையே அங்கு மேலும் 2 போலீசாரும், 4 பேரும் வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் 7 பேரும் கூட்டாக சேர்ந்து நவாப்பையும், சோயப்பையும் தாக்கி ரூ. 25,500 பணத்தை பறித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் இதுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்ம்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதோடு சில வெற்று காகிதங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ஷஹ்தரா போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மார்ச் 10ஆம் தேதி 3 போலீசார் உள்பட 7 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூப்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த மூன்று போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர். மேலும் மார்ச் 7ஆம் தேதியே அவர்கள் ஆனந்த் விஹார் போலீசாரிம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் புகாரை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததால், ஷஹ்தரா போலீசாரிடம் புகார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Arunachal Helicopter crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணம்

ABOUT THE AUTHOR

...view details