தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் உயிரிழந்த பரிதாபம்! - UP latest news

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் ஆம்புலன்ஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
ஆம்புலன்ஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

By

Published : May 31, 2022, 5:03 PM IST

பரேலி (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் ஃபதேகஞ் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ்- லாரி நேருக்கு நேர் மோதி இன்று (மே 31) விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த மூன்று பெண்கள் உள்பட ஏழு பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி மீது வேகமாக மோதியதில் ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலும் நொறுங்கிப்போனது.

தகவலறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்யவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7 வீரர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details