மலப்புரம்(கேரளா):கேரளா மாநிலம் கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த தம்பதியினரிடம் இருந்து 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று தரையிறங்கிய விமானத்தில் வந்த அப்துல் சமத் மற்றும் அவரது மனைவி சஃப்னா ஆகியோர் தங்கம் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து விமானத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ தம்பதியினர் இருவரும் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக சஃப்னா கர்ப்பிணி என நாடகமாடியது கண்டறியப்பட்டது. இருவரும் அவர்களது உள்ளாடையிலும், உடல் உறுப்புகளிலும் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.