பாட்னா:பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில் டிசம்பர் 12ஆம் தேதி போலி மதுபானம் அருந்திய 20 பேருக்கு தீவிர உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து நேற்றும் (டிசம்பர் 13) இன்றும் (டிசம்பர் 15) 14 பேர் உயிரிழந்தனர்.
பிகார் போலி மதுபானம் விவகாரம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக உயர்வு.. - போலி மதுபானம் பக்கவிளைவுகள்
பிகார் மாநிலத்தில் போலி மதுபானம் அருந்திய 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் யாது மோரை சேர்ந்த குணால் குமார் சிங், ஹனுமான் கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் சர்மா, மஷ்ராக்கைச் சேர்ந்த கணேஷ் ராம், மஷ்ராக்கைச் சேர்ந்த ராம்ஜி ஷா, இசுவாபூரின் டோய்லா கிராமத்தைச் சேர்ந்த விச்சேந்திர ராய், மனோஜ் குமார் சிங், அமித் ரஞ்சன் ஆகியோர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து இசுவாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பிகார் மாநிலத்தில் போலி மதுபானம் விற்பனை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிம்லாவில் கார் கூப்பன் மோசடி.. இளைஞர் தற்கொலை..