டெல்லி: லடாக்கில் 26 ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் துர்டுக் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்களுக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராணுவ வீரர்கள் 26 பேர் குழுவாக பார்த்தபூர் முகாமில் இருந்து ஹனீஃப் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்த அலுவலர்கள் 50-60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த வீரர்களை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.