தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி! - அமலாக்கத்துறை

நிரவ் மோடியின் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Session
Session

By

Published : Oct 20, 2022, 10:53 PM IST

மும்பை:பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே விசாரித்து வருகிறது. பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிரவ் மோடியின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மும்பையில் உள்ள நிரவ் மோடியின் வீடு, கார்கள் உள்ளிட்ட 39 சொத்துக்களைக் கைப்பற்ற அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிரவ் மோடியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த 39 சொத்துக்களின் மதிப்பு 500 கோடி ரூபாய் ஆகும்.

இதையும் படிங்க:குஜராத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வேலூர் திருட்டுக் கும்பல்!..

ABOUT THE AUTHOR

...view details