இந்தியாவின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இந்தியா நிறுவனம் கோவாக்ஸ்(COVAX) தடுப்பூசி உற்பத்தியை இன்று (ஜூன் 25) தொடங்கியுள்ளது.
அமெரிக்கவைச் சேர்ந்த பையோடெக்னாலஜி நிறுவனமான நோவாவாக்ஸ் என்ற நிறுவனம் இந்த கோவாக்ஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதன் செயல்திறன் 89% என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய சீரம் இந்தியா நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.