தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE... செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..? - ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான செப்டம்பர் மாதத்தின் முதல் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரையிலானவை.

september 1st week horoscope  weekly horoscope  horoscope  வாரத்திற்கான ராசிபலன்  வார ராசிபலன்  ராசிபலன்
செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்

By

Published : Sep 4, 2022, 7:34 AM IST

மேஷம்:உங்களுக்கு ஓரளவு பலனளிக்கும் வாரமிது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை மகிழ்விக்க முயற்சி செய்வார். வாரத் தொடக்கத்தில், உங்கள் மனக் கவலைகள் அதிகரிக்கலாம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். எந்தவொரு புதிய தொழிலையும் தொடங்க வேண்டாம்.

அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். தொழில்புரிபவர்கள் கடினமாக உழைத்தால் அவர்கள் எதிர்பார்க்கும் இலக்கை அடைவார்கள். அவர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து சில நன்மைகளைப் பெற வாய்ப்புண்டு. உங்கள் வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். நீங்கள் இறைவழிபாட்டில் நிறைய நேரம் செலவிடுவீர்கள். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது. வெற்றி அடைவதற்கு குறுக்குவழியைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உடல்நலம் இப்போது மேம்படும். எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையும் ஏற்படாது. வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்:திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது அவர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும். பரஸ்பர உரையாடல் மூலம், இதயத்தின் ஆசைகள் முன்னணிக்கு வரக்கூடும், மேலும் உங்களின் உறவு வலுவாக மாறும். வாரத் தொடக்கத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நீங்கள் கவலைப்படுவதைக் கண்டு வருத்தப்படலாம், ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். கவலைப்படுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. தைரியமாக இருங்கள், உங்கள் மன உறுதியுடன் இருங்கள். செலவுகள் அதிகமாக இருக்கலாம், அதுவும் வார நடுப்பகுதியில் குறையும்.

உங்கள் வருமானம் வழக்கம்போல் இருக்கும். உங்களின் எந்தத் தொழிலும் நிறுத்தப்படாது, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் தொழிலுக்கு பணப்பற்றாக்குறை தடையாக இருக்காது. வியாபாரம் வேகமெடுக்கும். தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். நீங்கள் வழக்கம் போல் சரியான நேரத்தில் உங்கள் வேலையைச் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் புதிதாக எதையாவது கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பாடத்திட்டத்திலிருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் இருக்கலாம். இதற்காக, அவர்கள் அத்துறை சார்ந்த அறிஞர்களின் உதவியை நாடுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது. இருப்பினும், உணவில் கவனம் செலுத்துவது நல்லது. தூய்மையான சுத்தமான தண்ணீரைக் குடிக்கவும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மிதுனம்: திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றி சில கவலைகள் இருக்கலாம். காதலிப்பவர்கள் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை அகற்றி ஒருங்கிணைந்து முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். தொழில்புரிபவர்கள் தங்கள் கூர்மையான அறிவாலும் ஆற்றலாலும் வேலையை சிறப்பாக செய்வார்கள். பெரிய அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள், இது தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தொழில்புரிபவர்கள் தங்கள் வேலையைச் செய்ய தங்கள் நடத்தையை சரிசெய்ய வேண்டியிருக்கும்.

இப்போது செலவுகள் அதிகரிக்கும், ஆனால் வருமானம் வழக்கம் போல்தான் இருக்கும், எனவே நீங்கள் சிறிது கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். அது அவர்களை ஊக்குவிக்கும், மேலும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பார்கள். இந்த வாரம் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு காயம ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றதல்ல.

கடகம்: இப்போது, நீங்கள் காதலிப்பவரின் உணர்வுகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இதனால் அவர்களின் தவறான புரிதல்களை சரி செய்யலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை வழக்கம்போல் இருக்கும். இருப்பினும், குடும்பப் பொறுப்புகளில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. தொழில்புரிபவர்களுக்கு நல்ல நேரமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும் தொழிலும் வெற்றி பெறுவார்கள்.

நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், நீங்கள் முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். இது அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். நீங்கள் பயணம் செய்ய விரும்பினால், வாரக் கடைசியில் இரண்டு நாட்கள் செல்லலாம்.

சிம்மம்: உங்களுக்கு சிறந்த வாரமிது. திருமணமானவர்களுக்கு இந்த வாரம் வழக்கம் போல் இருக்கும். ஆனால் உங்களுக்குள் பரஸ்பர மோதல்கள் இருக்கலாம். காதலிப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது நீங்கள் உங்கள் திட்டங்களில் வெற்றியைப் பெறுவீர்கள், இதன் காரணமாக உங்கள் வருமானமும் அதிகரிக்கக்கூடும். திட்டங்களின் வெற்றியின் காரணமாக உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.

இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு நன்மைகளைத் தரக்கூடும். குடும்ப வாழ்க்கையில் சில புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம், மேலும் குடும்ப வசதிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் புரிபவர்கள் தங்கள் தொழிலில் பலம் பெற முடியும். நீங்களும் பலசாலியாக இருப்பீர்கள், உங்கள் வேலை பாராட்டப்படும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு கலவையான அனுபவங்களைக் கொண்டு வரக்கூடும். உங்கள் வேலையில் முன்னேறுவதற்கு நிறைய புதிய விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும்.

மாணவர்கள் இந்த வாரம் நன்றாக படிப்பார்கள். இருப்பினும், அட்டவணை போட்டு படித்தால் நீங்கள் அதிக பயனடைவீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது உண்ணும் உணவில் கவனம் செலுத்துவது. வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கன்னி: காதலிப்பவர்கள் உறவில் சில ஏமாற்றங்களை உணரலாம். இருப்பினும், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் இந்த நிலை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே. நீங்கள் காதலிப்பவர் மீது நம்பிக்கை வையுங்கள். விரைவில் உங்கள் இருவருக்கும் இடையில் எல்லாம் சரியாகி விடும். குடும்ப வாழ்க்கையை நடத்துபவர்கள் வலுவாக உணருவீர்கள். உங்கள் தொழில் உங்கள் எண்ணம் போல் இருப்பதால் நீங்கள் நிறைய மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும். இது உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். வேலை செய்பவர்களின் செயல்திறன் மேம்படலாம்.

மாணவர்கள் கடினமாக உழைப்பார்கள், அவர்களின் கடின உழைப்பும் காணக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் பயனடையக் கூடும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம்: உங்களுக்கு நல்ல வாரமிது. உங்கள் குடும்ப உறவுகளை மேம்படுத்த நீங்கள் முயற்சி செய்வீர்கள். உங்கள் தாயுடன் நீங்கள் இணைந்திருப்பதையும் உணரலாம். இப்போது, அவரது உடல்நலம் மோசமடையக்கூடும், எனவே கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். காதலிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாரமாக இருக்கக்கூடும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். மன அழுத்தம் குறைக்கப்படலாம்.

இந்த வாரம் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை வலுவாக மாறக்கூடும். வார நடுப்பகுதியில் நீங்கள் பயணம் செய்யலாம். மாணவர்கள் வாரக் கடைசி நாட்களில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் வீட்டு விஷயங்களில் உங்களுக்கு சில பதற்றம் இருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்:உங்களுக்கு சிறந்த வாரமிது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் அன்பான தருணங்கள் அமையும். உங்கள் வாழ்க்கைத் துணை சில காரணங்களால் கோபப்படுவர். இதை அவரது உரையாடலில் காணலாம். சில நேரங்களில் நீங்கள் எதையாவது பற்றி கோபமாக இருக்கலாம், இருப்பினும் இதயத்தில் அன்பு இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் உறவைப் பற்றி பரஸ்பர உரையாடல் மூலம் உங்கள் உறவை அழகாக மாற்றுவீர்கள். இப்போது உங்கள் நம்பிக்கை அதிகரிக்கலாம்.

தரைப்பணிகள் நன்மை பயக்கும். சொத்து வாங்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் சக ஊழியர்களை நன்றாக நடத்துங்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் படிப்பில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இது உங்களுக்கு நல்ல முடிவுகளைப் கொடுக்கும்.

இந்த வாரம் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நீங்கள் உணவை சுவைத்து சாப்பிட விரும்பலாம், ஆனால் அதிக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு: உங்களுக்கு இந்த வாரம் வழக்கம்போல் இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை வழக்கமானதாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலையில் மும்முரமாக இருப்பதால் உங்கள் மனைவிக்கு அளித்த வாக்குறுதியை நீங்கள் மறக்க நேரிடும். எனினும், இது தவறு என்பதை உணர்வீர்கள். எனவே இது போன்று எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். காதலிப்பவர்கள் காதலில் வெற்றி பெறலாம்; காதலிப்பவர்கள் படைப்பாற்றல் மற்றும் செயல்திறனுடன் இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

சொத்து விஷயத்தில் செய்யப்படும் முயற்சிகள் இப்போது வெற்றியடையத் தொடங்கும், இது உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியைத் தரக்கூடும். தொழில்புரிபவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தை காண்பார்கள். தொழிலை மதித்து செய்வீர்கள், இது நல்ல பலனைத் தரக்கூடும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். உங்களுக்கு சில புதிய வேலைகளும் கிடைக்கலாம்.

மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கடினமாக படிக்க வேண்டியிருக்கும். உங்கள் உடல்நலம் இப்போது நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மகரம்:உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும் வாரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் உறவு ஒரு அழகான கட்டத்தை கடந்து செல்லக்கூடும். நீங்கள் காதலிப்பவரின் நடத்தை வித்தியாசமாக இருக்கலாம் என்பதால், காதலிப்பவர்கள் கொஞ்சம் ஏமாற்றமடையக்கூடும். நீங்கள் போட்ட கடின உழைப்பின் இனிமையான பலன்களை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். வருமானம் அதிகரிக்கும். சில செலவுகள் இருக்கலாம், ஆனால் அது அதிக விரையத்தை ஏற்படுத்தாது.

உங்கள் மகிழ்ச்சிக்காக சில புதிய விஷயங்களை முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வருமான அதிகரிப்பால் நன்மைகள் ஏற்படலாம். நீங்கள் எங்காவது முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு தயங்க வேண்டாம். ஆனால் ஒரு நல்ல நபரிடமிருந்து ஆலோசனையைப் பெற்ற பிறகு வேலையைச் செய்யுங்கள். இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கலாம். தொழிலில் எந்தத் தவறும் இல்லை என்பதில் கவனமாக இருங்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் வேகமாக செல்ல வேண்டியிருக்கலாம். அவர்கள் சில பிரச்சினைகள் காரணமாக படிப்பில் இருந்து விலகி இருந்திருக்கலாம்; இப்போது மீண்டும் கடின உழைப்பென்னும் பாதையில் செல்ல வேண்டிய நேரமிது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெரிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கும்பம்: உங்களுக்கு நல்ல வாரமிது. உங்கள் வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சிறுசிறு சச்சரவுகள் இருந்தபோதிலும் காதல் இருக்கும். இதன் காரணமாக, உங்கள் உறவு அப்படியே நீட்டிக்கும். காதலிப்பவர்கள் தங்கள் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். நீங்கள் கவனம் செலுத்தினால், உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

நீங்கள் சொத்துக்களால் ஆதாயமடைவீர்கள். நீங்கள் காரோ அல்லது வேறு ஏதாவது ஒரு வாகனமோ வாங்குவீர்கள். ஒரு வீட்டைக் கட்டுவதற்கான யோகங்கள் உங்களுக்கு நிறையவே இருக்கிறது, எனவே வீடு கட்டவோ, வாங்கவோ முயற்சிக்கவும். இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்தபடி அமையும், உங்கள் திட்டங்களும் லட்சியங்களும் முன்னோக்கி செல்லக்கூடும்.

மாணவர்கள் இந்த நேரத்தில் அனுபவித்து கடினமாக படிப்பார்கள். இதன் மூலம் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளையும் பெறுவார்கள். தொழிப் புரிபவர்கள் தங்கள் தொழிலை மதித்து செய்வதன் மூலம், தங்கள் தொழிலில் பல மடங்கு முன்னேறிச் செல்லலாம். உங்கள் உடல்நலம் இப்போது மேம்படலாம். இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மீனம்: உங்களுக்கு நல்ல வாரமிது. காதலிப்பவர்கள் தங்கள் உறவில் நிறைய இலகுவான தருணங்களை உணரலாம். உங்கள் காதலி அவ்வப்போது உங்களுடன் தொடர்பில் இருக்கலாம், இது உறவை வலுவாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணை அன்பாகப் பேசலாம், அவர்களுடைய ஞானத்தைக் கண்ட பிறகு உங்களை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டம் வலுவாக உள்ளதால், உங்கள் வேலையில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். சில காலமாக இருந்த பிரச்சினைகளும் படிப்படியாக நிவாரணம் பெறத் தொடங்கும். உங்கள் எதிரிகளிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களால் உங்களுக்குத் தீங்கு செய்ய முடியாவிட்டாலும், அவை உங்களுக்கு மனக் கவலைகளைத் தரக்கூடும். இதன் காரணமாக, உங்களுக்கு சில செலவுகளும் ஏற்படலாம்.

நீங்கள் தொழிலை உறுதியாக நம்பலாம். உங்கள் கடின உழைப்பு உங்களுடன் உள்ளது. சிறப்பாக செயல்பட உங்களுக்கு நீங்களே அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் தொழில் நன்றாக இருக்கும். நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால், இந்த நேரம் தொழிலை மேலும் மேம்படுத்தலாம், மேலும் உங்கள் தொழில் தொலைதூர பகுதிகளில் முன்னோக்கி செல்லக்கூடும். இந்த வாரம் மாணவர்களுக்கு நல்லதாக அமையும். அவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: செப்டம்பர் 4 இன்றைய ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details