டெல்லி:வணிக பத்திரிகையான தி பைனான்சியல் எக்ஸ்பிரஸின் நிர்வாக ஆசிரியர் சுனில் ஜெயின். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். இந்நிலையில் அவர் நேற்று (மே. 15) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது சகோதரிக்கும் கரோனா தொற்று இருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து மூத்த பத்திரிகையாளர் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.