நாட்டின் மூத்த செய்தியாளரும், இந்திய எக்ஸ்பிரெஸ் நாளேட்டின் தேசிய பிரிவு தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவர் ராவீஷ் திவாரி. இவர் டெல்லியில் நேற்று(பிப்.18) காலமானார். அவருக்கு வயது 40. புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல பத்திரிகையாளர் ரவீஷ் திவாரியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது: “ரவீஷ் திவாரியை விதி விரைந்து அழைத்து கொண்டது. ஊடக உலகில் சிறந்த பங்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது.