பாலக்காடு:கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே. சங்கரநாராயணன் (90). இவர், வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (ஏப். 24) அவரது வீட்டில் காலமானார். சங்கர நாராயணன், கேரள மாநில அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும், 6 மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
1932 அக்டோபர் 5 அன்று, பாலக்காட்டில் உள்ள சொர்ணூரில் பிறந்த இவர், மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிவந்துள்ளார். 1977ஆம் ஆண்டு முதன்முறையாக திருத்தாலா தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, 1980இல் கிருஷ்ணாபுரம், 1987இல் ஒட்டப்பாளம், 2001இல் பாலக்காடு ஆகிய இடங்களில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.