ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை, உலகம் முழுவதும் உள்ள பெண்கள் கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, வீரமங்கை ஒருவரை உதவி துணை ஆணையர் பதவியில் அமர்த்த நொய்டா காவல் துறை முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து நொய்டா காவல் துறை துணை ஆணையர் பிருந்தா சுக்லா கூறுகையில், "பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஐடியாக்களை பொதுமக்கள் அனுப்ப வேண்டும். ஆண்கள், பெண்கள் என இருவரும் தாரளமாக அனுப்பலாம். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு முறையே ரூபாய் ஐந்தாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், சிறந்த ஐடியா அளித்த பெண்ணை, உதவி துணை ஆணையர் பதவியில் ஒரு நாள் அமர வைக்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.