தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த ஆண் செவிலியர்! - lisie hospital

Selvin Shekhar Organs donated: மூளைச்சாவு அடைந்த ஆண் செவிலியர் செல்வின் சேகரின் இதயம், சிறுநீரகம் கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த செல்வின் சேகரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது
செல்வின் சேகர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 4:30 PM IST

எர்ணாகுளம்:மூளைச்சாவு அடைந்த செல்வின் சேகரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம், திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு, லிசி மருத்துவமனையில் ஹரிநாராயணன் என்பவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவரும், இவரது மனைவியும் செவிலியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், செல்வின் சேகர், கடுமையான தலைவலியால் நவம்பர் 21ஆம் தேதி திருவனந்தபுரம் KIMS மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த செல்வினுக்கு நவம்பர் 24 ஆம் தேதி மூளைச் சாவு ஏற்பட்டது. இந்நிலையில், உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்த செல்வினின் மனைவி, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். காயம்குளத்தை சேர்ந்தவர் ஹரிநாராயணன் (வயது 16).

டிலேட்டட் கார்டியோமயோபதி (டி.சி.எம்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஹரிநாராயணன் சிகிச்சிக்காக, திருவனந்தபுரத்திலிருந்து, செல்வின் சேகரின் உடல் உறுப்புகள், அமைச்சர் பி.ராஜீ உதவியுடன், மாநில அரசு ஹெலிகாப்டர் (ஏர் ஆம்புலன்ஸ்) மூலமாக எர்ணாகுளம் கொண்டுவரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இதயம் லிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு, மருத்துவர் ஜோஸ் சாக்கோ தலைமையில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், செல்வின் சேகரின் உடல் உறுப்புகள் திருவனந்தபுரத்திலிருந்து, கொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாக, திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், கேரள அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் உடல் உறுப்பு தானம் ஒருங்கிணைக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஹரிநாராயணன் சகோதரர் சூர்ய நாராயணனுக்கும், இதே போன்று நோயின் காரணமாக, லிசி மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த முறையும் சிகிச்சைக்காக மாநில அரசு உதவியுடன், திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக இதயம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுவரை லிசி மருத்துமனையில் 28 இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து, கொச்சிக்கு கொண்டுவரப்பட்ட செல்வின் சேகரின் உடல் உறுப்புகளில், சிறுநீரகங்களில் ஒன்று திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கணையம் ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது. மேலும், திருவனந்தபுரம் கண் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு கண்களும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன்.. முற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் - அண்ணாமலை மோதல்!

ABOUT THE AUTHOR

...view details