தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தி முன்னிலையில் தீக்குளிப்பு - பாரத் ஜோடோ யாத்திரையில் பரபரப்பு - ஜாடோ யாத்திரை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் இன்று காலை பாத யாத்திரை(bharat jodo yatra) தொடங்கிய போது ராகுல் காந்தியின் முன்பு ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

a
a

By

Published : Dec 8, 2022, 10:07 AM IST

Updated : Dec 8, 2022, 10:44 AM IST

கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் ராகுல் காந்தி 5-வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று கோட்டா பகுதியில் யாத்திரை மேற்கொண்ட போது ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டா பகுதியில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க ராகுல் காந்தி சென்ற போது அவர் மேடையை அடையும் போது ஒருவர் தீக்குளித்தார்.

பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மேடை ஏறுவதைத் தவிர்த்தனர். இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீயை அணைத்து, உடனடியாக அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார்? ஏன் ராகுல் காந்தி யாத்திரையில் தீக்குளித்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஐந்தாவது நாளான இன்று ஜலவர் சாலையில் அமைந்துள்ள அனந்தபுரா வரவேற்பு வாயிலில் முதல் ராங்பூர் சதுக்கம் வரை 23 கிலோமீட்டர் தூரத்தை ராகுல் காந்தி கடக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தீக்குளிப்பு சம்பவத்தால் பாதியில் நிறுத்தப்பட்டு மாதோபூருக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வரலாற்று சாதனை படைத்த இமாச்சல பிரதேச தேர்தல்!

Last Updated : Dec 8, 2022, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details