புதுச்சேரியில் உள்ளகூனிமுக்கு கிராமத்தில் விவசாயி ஏழுமலை என்பவர் வீட்டில் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று(டிச.23) அதிகாலை அதிகாரிகள் சென்று பார்த்த போது வீட்டை ஒட்டி இருந்த ஷட்டர் போட்டிருந்த அறையில் 47 கேன்களில் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,410 லிட்டர் சாராயம் இருந்தது.
புதுச்சேரியில் விவசாயி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயம் பறிமுதல் - Etummalai is a farmer in Koonimku village
புதுச்சேரியில் விவசாயி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 கேன்களில் இருந்த எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Etv Bharatவிவசாயி வீட்டில் பதுக்கி வைத்த எரி சாராயம் பறிமுதல்
இவற்றை கலால் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனிடையே தலைமறைவான விவசாயி ஏழமலையை தேடி வருகின்றனர். 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த எரி சாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்தால் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்று கலால் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கோவை விமான நிலையத்தில் கரோனா சோதனை