எர்ணாக்குளம் : தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.
லட்சத்தீவின் புதிய நிர்வாகியான பிரபுல் கோடா பட்டேல், தீவு மக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இது குறித்து கருத்து பதிவிட்ட நடிகை ஆயிஷா சுல்தானா, “பிரபுல் பட்டேலை உயிரி ஆயுதம் (bio-weapon) என வர்ணித்தார்.
இதையடுத்து சுல்தானா மீது காவரட்டி காவல் நிலையத்தில் தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைதிலிருந்து தப்பிக்கும் வகையில் முன்பிணை கோரி சுல்தானா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.