லட்சத்தீவு: 2020 டிசம்பரில் லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட படேல் அறிமுகப்படுத்திய புதிய சீர்திருத்தங்கள் தொடர்பாக கடந்த சில நாள்களாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தீவுவாசிகளின் நலனுக்கு எதிரானது என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் லட்சத்தீவு தடுப்பு (கூண்டா சட்டம்), லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் லட்சத்தீப் பஞ்சாயத்து ஒழுங்குமுறை 2021 போன்ற வரைவு சட்டங்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவின் விவகாரம் குறித்து பிரபல நடிக்கை மற்றும் இயக்குனரான ஆயிஷா சுல்தானா பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரபுல் பட்டேலை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அதில் பிரபுல் பட்டேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்ட பயோ ஆயுதம் என்று பேசியிருந்தார். மேலும் லட்சத்தீவில் கரோனாவை பரப்புவதற்காகவே ஒன்றிய அரசு பிரபுல் பட்டேலை நிர்ணயம் செய்யப்படுள்ளதாகவும் ஆயிஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து லட்சத்தீவில் பாஜக தலைவர் அப்துல் காதர், ஆயிஷாவின் மீது மத்திய அரசினை விமர்சித்தற்காக புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்பட்யையில் ஆய்ஷா சுல்தானா மீது காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.