தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழிற்சாலைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த காவலாளி அடித்துக்கொலை.. கேரளாவில் நடந்தது என்ன? - காவலாளி அடித்துக் கொலை

கேரளாவில் தனியார் தொழிற்சாலை காவலாளியை அடித்துக் கொலை செய்த அசாம் மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தொழிற்சாலைக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால், காவலாளி கொல்லப்பட்டுள்ளார்.

Kerala
கேரளா

By

Published : Jun 19, 2023, 3:01 PM IST

கேரளா: கேரள மாநிலம் கோட்டயத்தில், பூவந்துருது தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலையில், கோட்டயத்தைச் சேர்ந்த ஜோஸ் (57) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று (ஜூன் 19) காலை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் பௌர்வா என்பவர், தனியார் ரப்பர் தொழிற்சாலையில் உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முயன்றார்.

அப்போது, காவலாளி ஜோஸ் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். அதில், மனோஜ் வேறு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் என்பது தெரியவந்தது. இதனால், காவலாளி ஜோஸ் மனோஜை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மனோஜ் தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் காவலாளியின் தலையில் அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஜோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இதைக் கண்ட மனோஜ் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் மனோஜைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டயம் கிழக்கு போலீசார் மனோஜைக் கைது செய்தனர். மேலும், புலம்பெயர் தொழிலாளியான மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Wrestlers Protest: "சாக்ஷி மாலிக் காங்கிரஸின் கைப்பாவையாக உள்ளார்" - பபிதா போகத் விமர்சனம்

முன்னதாக கடந்த மாதம், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகரை பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.

கோட்டயத்தைச் சேர்ந்த பிஜு என்பவரிடம், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியான மகாலிங்கம் செல்போனை கேட்டுள்ளார். ஆனால், பிஜு தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் மதுபோதையில் இருந்ததால், வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது உடனிருந்த தொழிலாளர்கள் பேசி சமாதானப்படுத்தினர்.

ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு மகாலிங்கம் பிஜுவின் போனை எடுத்ததாக தெரிகிறது. இதை அறிந்த பிஜு, நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மகாலிங்கத்தை கம்பியால் தலையில் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்தில் கோட்டயத்தைச் சேர்ந்த பிஜுவை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; இரண்டு பேர் கைது, ஒருவர் தலைமறைவு!

ABOUT THE AUTHOR

...view details