தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் 144 தடை உத்தரவு - Omicron Threat in mumbai

ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்க மும்பையில் இன்றும் (டிசம்பர் 11), நாளையும் (டிசம்பர் 12) 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

Section 144 imposed in Mumbai
Section 144 imposed in Mumbai

By

Published : Dec 11, 2021, 11:43 AM IST

மும்பை: உருமாறிய கரோனா தொற்று வகையான ஒமைக்ரான், நாடு முழுவதும் மெள்ள மெள்ள பரவிவருகிறது. வெளிநாடுகளிலிருந்து மகாராஷ்டிரா வந்த 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, தலைநகர் மும்பையில் இன்றும், நாளையும் 144 தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், பேரணி, போராட்டம் போன்றவற்றை நடத்துவதோ, இரண்டு பேருக்கு மேல் வாகனங்களில் ஊர்வலம் செல்வதோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிக்கலான நிலையில் அசாதாரண துணிச்சல்காரர் கேப்டன் வருண் சிங்!

ABOUT THE AUTHOR

...view details