ஸ்ரீநகர்:சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர். தங்களது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. பிறகு அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன, இணையம் முடக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கரோனா தொற்றினால் அவை மீண்டும் மூடப்பட்டன.
காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உலகில் எங்கும் இல்லாத வகையில், கடுமையானதாகவும், நீண்டதாகவும் இருந்தது என காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.