உலகம் முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. , இரண்டாவது அலை காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டனர்.
இதற்கு முக்கியக் காரணம் மக்களின் கவனக்குறைவு மட்டுமல்ல; வளிமண்டலத்திலும் கிரக அமைப்பிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எனக் கூறப்படுகிறது.
இரண்டாவது சூரிய கிரகணம் உலகிற்குத் தீங்கு விளைவிக்கும் 2021இல் முதல் சந்திர கிரகணம் மே 26ஆம் தேதி நிகழ்ந்தது. அதிலிருந்து 15 நாள்கள்கூட ஆகவில்லை, இரண்டாவது கிரகம் வரப்போகிறது.
இதன் விளைவு ஜோதிடத்தில் சிறப்பாகச் சொல்லப்படவில்லை. இரண்டாவது கிரகணம் தீங்கு விளைவிக்கும். அதுவும் 15 நாள்கள் இடைவெளியில் நிகழும் கிரகணம் மனித வாழ்க்கையில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீ காஷி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளை கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் பிரசாத் தீட்சித் கூறுகையில், "15 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கிரகணம் நிகழும் போதெல்லாம், அது நாட்டிற்கும் உலகிற்கும் சரியானது என்று சொல்ல முடியாது.
முழு உலகிலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். கிரகணத்தின் நேரடி அல்லது மறைமுக பக்க விளைவுகள் நிச்சயமாக மனித வாழ்க்கையில் தெரியும். இருப்பினும், இந்தக் கிரகணத்தின் விளைவு இந்தியாவில் இருக்காது.
ஆனால், அனைத்து இடங்களில் உள்ள கோயில்களிலும் பூஜைகள் நடக்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளில் வழிபாடு நடத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு 'செக்' - மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு