மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிலையில் அதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
முதற்கட்ட நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நாளை (மார்ச்8) முதல் தொடங்கவுள்ளன.
அந்த வகையில், மாநிலங்களவை காலை 9 மணி முதல் மத்தியம் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களுக்கென தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எம்.பி.க்களின் குடும்ப உறுப்பினர்களும் இங்கு தடுப்பூசி செலுத்தக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடையும் என மக்களவை சபாநாயக் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி!