நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை வேளாண் துறையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் வேளாண்துறையில் மிக்குறைவாகவே ஏற்பட்டுள்ளது.
மே மாத காலத்தில்தான் இரண்டாம் அலை கிரமாப்புறங்களில் பரவத் தொடங்கியது. ஆனால் அது வேளாண் பருவ காலம் இல்லை என்பதால் வேளாண் துறையையும் அது சார்ந்தவர்களையும் பெரிதும் பாதிக்கவில்லை. மேலும், அறுவடை செய்தவர்களுக்கு முறையாக கொள்முதல் நடைபெற்று குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்பட்டதால், விவசாயிகளின் வாழ்வாதராம் பெரிய பாதிப்புகளுக்குள்ளாகவில்லை.