இந்தியாவில் ஸ்புட்னிக் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தெலங்கான தலைநகர் ஹைதரபாத்தில் குறைந்த செயல்திட்ட வடிவில் நேற்று (மே 14) தொடங்கப்பட்டது. மே 1ஆம் தேதி ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்கள் இந்தியா வந்த நிலையில், மருந்தக சோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான விலையை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டி அறிவித்துள்ளது.
தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ.995ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கியப் பின்னர் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் முதல் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க டாக்டர் ரெட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.