தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதானி முறைகேடு விசாரணை - உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கும் செபி! - sebi on adani investigation in tamil

அதானி குழும முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்டு உள்ளது.

Adani
Adani

By

Published : Aug 14, 2023, 3:44 PM IST

டெல்லி : அதானி குழுமம் மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தணை வாரியமான செபி முறையிட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக் கொண்டு, இயங்கி வரும் வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செயற்கை முறையில் பங்குகளின் மதிப்பை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த புகார் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஹிண்டன்பர்க் ஆய்வு குறித்து விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், அதானி குழுமம் மீதான முறைகேட்டு புகார்கள் குறித்த விசாரணை அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட். 14) வல்லுநர்கள் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கோரி செபி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதானி குழும முறைகேட்டு புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்து செபியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் மீதான 24 விசாரணைகளில் 17 அறிக்கைகள் நிறைவு பெற்றதாகவும், மீதமுள்ள பங்கு மற்றும் பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொள்ள கால அவகாசம் கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள இரண்டு மொரிசியஸ் நிறுவனங்கள் தொடர்பாக எழுந்த புகார் குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வரித்துறை ஆணையம் விசாரித்து வருவதாக கூறப்பட்டது.

அதானி குழும பங்குகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக ஆறு நிறுவனங்கள் முதலீடு செய்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஆறு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் என கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. அதுகுறித்தும் விசாரித்து வருவதாக பங்கு மற்றும் பரிவர்த்தணை ஆணையமான செபி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :நிலவை நெருங்கும் சந்திரயான் 3 - மூன்றாவது முறையாக சுற்றுப்பாதை உயரம் குறைப்பு!

ABOUT THE AUTHOR

...view details