கேரளா: கேரளாவில் ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய்ப் பரவி வருகிறது. ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற வைரஸ் காரணமாக இந்த நோய் பரவுகிறது.
ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள சிக்கர் (chiggers) பூச்சிகள் கடிப்பதன் மூலம் இது மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சருமத்தில் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். நோய்த்தீவிரமானால் மூளைக்காய்ச்சல்கூட ஏற்படும் எனத்தெரிகிறது. கேரளாவில் வரகலா பகுதியில் கடந்த 9ஆம் தேதி 15 வயது சிறுமி ஸ்க்ரப் டைபஸ் நோயால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு பெண்மணி இந்த நோயால் உயிரிழந்துள்ளார். அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டு கடந்த 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் ஸ்க்ரப் டைபஸ் நோயால் 4 நாட்களில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வரகலா உள்ளிட்டப் பகுதிகளில் நோய்க்கட்டுப்பாட்டுப் பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உத்தரப் பிரதேசம் வன்முறை: முக்கிய புள்ளிகளின் வீடுகள் இடிப்பு