உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தாண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
கரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பியது. இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டுவந்தன.
கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதாவது 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்ளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கிவந்தது. இதனிடையே ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு முழு நேரமாக வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இந்நிலையில், புதுச்சேரி கல்வித் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 18ஆம் தேதி முதல் 9.30 முதல் 12.30 மணிவரை அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இந்த நேரங்களில் இயங்கும்" என்று தெரிவித்துள்ளார்.