புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது அமைச்சர்கள் துறை தொடர்பான பட்டியலை அளுநரிடம் அவர் வழங்கினார்.
பள்ளி, கல்லூரி திறப்பு
புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது அமைச்சர்கள் துறை தொடர்பான பட்டியலை அளுநரிடம் அவர் வழங்கினார்.
பள்ளி, கல்லூரி திறப்பு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், "புதுச்சேரியில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகளும் அதே நாளில் திறக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும் பள்ளி, கல்லூரி திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்பால் கல்வியைத் தொலைத்த பழங்குடி மாணவர்கள்- பெற்றோர் வேதனை