தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை! - புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புயல் மற்றும் கடும் மழை காரணமாக நாளை முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

narayanasamy
narayanasamy

By

Published : Nov 25, 2020, 2:58 PM IST

Updated : Nov 25, 2020, 5:09 PM IST

நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு முதல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர், காலாப்பட்டு, இலாசுபேட்டை பகுதிகளில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை!

இதனிடையே புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில், புயல் காரணமாக நாளை முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் வருகிறது ராணுவம்!

Last Updated : Nov 25, 2020, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details