கரோனா மற்றும் பருவமழை பாதிப்புகள் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதும், மீண்டும் திறப்பதும் என நடக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு 15 நாள்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலாம மாணவர்களுக்கு, ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை என அம்மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.