அமராவதி:மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. குறிப்பாக, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது.
பள்ளி, கல்லூரிகள் மூடல் - பாரத் பந்த்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.27) மூடப்பட்டுள்ளன.
school college closed
ஹரியானா, பஞ்சாப் மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தை ஓராண்டு காலமாக தீவிரமாக நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் நள்ளிரவு முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.