தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Bihar boat accident: பீகாரில் 30 குழந்தைகளுடன் பாக்மதி ஆற்றில் கவிழ்ந்த படகு: மீட்புப் பணி தீவிரம்.!

Bihar boat accident: பீகார் படகு விபத்தில் 20 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 10 பேரின் நிலை தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 5:35 PM IST

பாட்னா:முசாபர்பூர் அடுத்த மதுர்பட்டி காட் பகுதியில் இன்று (செப்,14) காலை மாணவர்கள் உட்பட 30 பேரை ஏற்றிச்சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 20 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீர் பயங்கராவாத தாக்குதலில் மூன்றாம் தலைமுறை ராணுவ வீரர் கர்னல் மன்பிரீத் சிங் மரணம்!

மீதம் இருந்த 10 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் தற்போது வரை தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்த துயர சம்பவத்திற்கு கவலை தெரிவித்தார். மேலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், சம்பவ இடத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"அவளுக்கு வெரும் 11 ஆயிரம் டாலர் போதும்" இந்திய மாணவி மரணம் குறித்து அமெரிக்கா போலீஸ் கேலி பேச்சு!

மேலும் படகு விபத்துக்குள்ளான போது சில குழந்தைகள் நீச்சல் அடித்துக்கொண்டு உயிர் தப்பிய நிலையில் மற்ற குழந்தைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், படகு உரிமையாளர்கள் லாபத்தை கணக்கில் கொண்டு அதிகப்படியான ஆட்களை படகில் ஏற்றி செல்வது வடியாக இருந்துள்ளது எனவும் இதுவே விபத்துக்கான காரணமாக இருக்க வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது. இருந்தபோதும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீகாரில் தொடர்ந்து பெய்யும் கனமழை, நேபாளத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் உள்ளிட்ட சம்பவங்களால் அங்குள்ள ஆறுகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் பாக்மதி போன்ற ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவலத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு இடையேதான் தற்போது அங்கு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க:4 ஆண்டுகளாக சிக்னலில் உதவிய நாய் விபத்தில் மரணம்.. திருப்பூர் போலீசார் கண்ணீருடன் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details