பெங்களூரு: கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி. நாகேஷ் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தியானத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் கவனம், ஆரோக்கியம், நேர்மறை சிந்தனை, ஆளுமைத்திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த, தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்ய அறிவுறுத்த வேண்டும் என்றும், அதற்குத்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் கல்வி கற்கவும், நல்ல குணங்களை மேம்படுத்திக்கொள்ளவும், தியானம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.