டெல்லி :ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia) எனப்படும் மூளை சார்ந்த நோயால் அவதிப்பட்டு வந்த ஆப்பரிக்க நாட்டைச் சேர்ந்தவருக்கு முதல் முறையாக அரியானாவில் மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
ஸ்கிசோஃப்ரினியா எனப்படும் பாதிப்பு கற்பனை உலகையும் உண்மையான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருத தவறுதலும், பெரும்பாலும் விசித்திரமான மற்றும் எதிர்பாராத முறைகளில் நடந்து கொள்ளுதல் போன்ற பாதிப்புகளை கொண்ட நோயாக காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் இதை கடுமையான மனநோய் என்றும் கூறலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதலும் உண்மையற்ற தோற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும் மூளைக் கோளாறு என்றும் இந்த நோயை மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த வகை நோயால் அவதிப்பட்டு வந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 23 வயது நபருக்கு அரியானாவில் வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். \
அரியானா மாநிலம் குருகிராமல் உள்ள மாரெங்கோ ஆசியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் தனது 13 வயதில் இருந்தே ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மருத்துவர் ஹிமான்ஷு சம்பனேரி தலைமையிலான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு ஏறத்தாழ எட்டு முதல் பத்து மணி நேரம் அறுவை சிகிச்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸின் எனப்படும் ஆழமான மூளை தூண்டுதல் மற்றும் மேம்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அறுவை சிகிச்சை முறையில் மூளைக்குள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்முனைகளை ஆழமாக பொருத்தியும், வயர் மூலம் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட மின்முனைகள் சமநிலையை உருவாக்க வும் மற்றும் அசாதாரண செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் மின்முனைகளை கொண்டு தூண்டப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதும் ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்ற அளவிலே பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில் அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் அடுத்த கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :சிலிண்டர் லாரியில் பயங்கர தீ விபத்து... விண்ணை நோக்கி தூக்கி வீசப்பட்ட சிலிண்டர்கள்!