தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Article 370: உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2 முதல் நாள்தோறும் விசாரணை - ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து, தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

Watch Live: Supreme Court Hearing of Article 370 abrogation
உச்சநீதிமன்றத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து தொடர்பாக, ஆக.,2 முதல் தினசரி விசாரணை

By

Published : Jul 11, 2023, 11:35 AM IST

Updated : Jul 11, 2023, 12:18 PM IST

டெல்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று (ஜூலை 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவவும், வளர்ச்சி ஏற்படவும் 370வது சட்டப்பிரிவை நீக்குவது அவசியமாக இருந்ததாக மத்திய அரசுத் தரப்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர், ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இதுவரை காணாத அமைதியான சூழல் நிலவுவதாகவும் மத்திய அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பயங்கரவாதிகளின் தூண்டுதல்களால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் நடைபெற்ற கல் வீச்சு சம்பவங்கள், தற்போது, கடந்தகால நிகழ்வுகள் ஆகி விட்டதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தொடரப்பட்ட மனுக்கள் மீதான தினசரி விசாரணை, ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10.30 மணிக்குத் தொடங்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, அறிவிப்புக்கு பிந்தைய மேம்பாடு குறித்து மத்திய அரசு கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தாலும், அது அரசியலமைப்பு அமைப்பிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நீதிபதிகள் அமர்வு முன், தனது வாதத்தை வைத்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, பிரமாணப் பத்திரம் பத்திரிகைகளில் பரவலாகப் பதிவாகி உள்ளது எனக் குறிப்பிட்டார். மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்த நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சியும் வெட்கப்படுவதற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது என்று துஷார் மேத்தா தனது வாதத்தில் மேற்கோள் காட்டி உள்ளார்.

இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, இந்த விவகாரத்தில், சில அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார். இதற்கு உரிய நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் மற்றும் ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத் ஆகிய இரண்டு மனுதாரர்கள் இந்த விவகாரத்தின் நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தங்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று கோரி உள்ளதாக மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர்களின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டு உள்ளது.

இதையும் படிங்க: West Bengal Panchayat polls: மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Last Updated : Jul 11, 2023, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details