தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்! - உச்ச நீதிமன்றம்

டெல்லி: மக்களவை தேர்தலில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கனிமொழி
கனிமொழி

By

Published : Mar 17, 2021, 8:50 PM IST

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தூத்துக்குடியில் பெற்ற வெற்றி செல்லாது எனக் கூறி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கனிமொழி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, "விசாரணையை எதிர்கொள்வதில் கனிமொழிக்கு என்ன கடினம் உள்ளது. விசாரணை நடக்க வேண்டும்" என தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வில்சன், அவர் விசாரணைக்கு எதிராக இல்லை என பதிலளித்தார். தன்னுடைய கணவரின் பான் கார்டு குறித்த விவரங்களை அவர் ஏன் சமர்பிக்கவில்லை என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, "கனிமொழியின் கணவர் வெளிநாட்டவர் ஆவார். எனவே, அவரிடம் பான் கார்டு இல்லை. எந்த விவரத்தையும் அவர் மறைக்கவில்லை" என வில்சன் பதிலளித்தார்.

இறுதியாக பேசிய பாப்டே, "நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளமுடிகிறது. கணவரின் பான் கார்டை சமர்பிக்க தேவையில்லை. ஆனால், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க வேண்டும். வங்கி கணக்கு வைத்திருப்பதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details